யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது
மேக கூட்டம் யாவுமே….
பாதம் கீழே ஓடுது
கடலின் மீது கடந்து போகும்
பறவையாய் நீ
இதயம் கடந்தாய்…..
ஓ ஓ ஹோய்…..
யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது
ஓ தாவும் குழந்தை
போல நெஞ்சம்
உன்னை கண்டு தாவி செல்ல
நீயும் என்னை தூக்கி கொஞ்ச
தவிக்கும் உயிரை என்ன சொல்ல
இரு விழி இன்று
வழி பறி செய்து
போகும் உந்தன் பார்வையில்
இரு உடல் இன்று
ஒரு உயிர் என்று
ஆகும் உந்தன் தீண்டலில்
எந்தன் ஆயுள் ரேகை
உந்தன் கையில் பார்க்கிறேன்….ஏ…..ஏ….
யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது
ஓ காற்றில் ஈர பதங்கள் கூடும்
மாயம் தந்தாய் நீயும் மெல்ல
ஆற்றில் ஓடும் இலையை போல
நானும் உன்னில் நீந்தி செல்ல
குறுந்தொகை போலே
குறும்புகள் அள்ளி
கையில் நீ நீட்டினாய்
இதுவரை இந்த உணர்வுகள் இல்லை
நீதான் உயிர் நீவினாய்
நிழலை போல நீயும் வந்து
மழலை ஆக்கினாய்…..ஆஅ…..அ…..
யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது
மேககூட்டம் யாவுமே….
பாதம் கீழே ஓடுது
கடலின் மீது கடந்து போகும்
பறவையாய் நீ
இதயம் கடந்தாய்…..
ஓ ஓ ஹோய்…..
யாரை தேடி நெஞ்சமே
கண்ணில் ஜாடை பேசுது
நீயும் என்னை நெருங்க
ஒரு கோடி சாரல் வீசுது
No comments:
Post a Comment